அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியீடூ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 27, 2022

Comments:0

அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியீடூ

IMG_20221227_210753
அரசாணை (நிலை) எண்.373, நாள்: 26-12-2022 - 2021-22-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து C மற்றும் D” பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3,000/- என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2021-2022-ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1000/- பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

2.2021-2022-ஆம் கணக்காண்டிற்கு C மற்றும் D” பிரிவு சார்ந்த, முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்/ பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

பொங்கல் மிகை ஊதியம் அரசாணை வெளியீடு

Click here to download Tamil version

Click here to download English version

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601553