Breaking

Showing posts with label DGE/DSE/DEE. Show all posts
Showing posts with label DGE/DSE/DEE. Show all posts

Friday, July 01, 2022

July 01, 2022

ஆணையரகத்தின் தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆண்டாய்வு - பள்ளிக் கல்வி கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - சார்ந்து.

Sunday, November 07, 2021

November 07, 2021

8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு! - தேர்வுத்துறை அறிவிப்பு.

8-ம் வகுப்பு தனித்தேர்வு ஒத்திவைப்பு!

நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதாக இருந்த தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு.

இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அறிவிப்பு.
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 - கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைத்தல் குறித்து செய்திக்குறிப்பு வெளியிடக் கோருதல் - தொடர்பாக.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11 2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதரத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத் தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.

இச்செய்திக்குறிப்பினை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வானொலியில் செய்தியாக வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல.

Friday, October 15, 2021

October 15, 2021

பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகை வங்கி கணக்குகளின் இருப்புத்தொகை விவரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!

Wednesday, October 13, 2021

October 13, 2021

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம்.

2021-2022 கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு ) பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்களை கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-2021 ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பொதுத்தேர்விற்கு புதிய தேர்வு மையங்களை பரிந்துரைச் செய்து அனுப்பப்பட்ட பள்ளிகளை தவிர்த்து கருத்துரு அனுப்பப்படவேண்டும். தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து , நடப்பு கல்வியாண்டு 2021-2022 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு ) பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலனை செய்து , அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை “ அ ” மற்றும் " ஆ " ஆகியவற்றைப் பூர்த்தி செய்து உரிய முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று கருத்துருவினை இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.

மேலும் , மார்ச் 2020 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் ( சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை / நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் ) மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது. தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின் , அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துரு அனுப்புதல் வேண்டும்.

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் . புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள் , இத்துடன் இணைத்தனுப்பப்படும் அரசாணையில் உள்ள விதிகளின்படி , தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்படும் பள்ளிகள் பற்றிய அனைத்து விவரங்களையும் இத்துடன் அனுப்பப்படும் பிற்சேர்க்கை “ அ ” மற்றும் " ஆ " வில் சரியான முறையில் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவிக்கலாகிறது. 10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையம் கோருவதற்கான கருத்துரு மற்றும் விண்ணப்ப படிவம் :

SSLC Public Exam - New Centre Request Format - Download here...

Tuesday, October 05, 2021

October 05, 2021

RTI மனுவிற்கு பதில் அளிக்காத 25 முதன்மைக் கல்வி அலுவலர்கள் - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

ஆர்டிஐ மனுவுக்கு பதிலளிக்காத 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ’இளைய தலைமுறை’ என்னும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவர் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களில் எத்தனை பேர் பி.சி., எம்பிசி, எஸ்சி, எஸ்டி, பிசிஎம், ஓ.சி. உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவரின் விவரத்தையும் அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஆர்டிஐ மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதிலளிக்கவில்லை.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைக்கு சங்கர் மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பி இருந்தார். அதையடுத்துப் பள்ளிக் கல்வித்துறை பொதுத் தகவல் அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’மனுதாரரின் மனுவிற்கு உரிய காலக் கெடுவிற்குள்‌ தகவல்‌ வழங்குமாறு இந்தக் கடிதத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகப் பொதுத்‌ தகவல்‌ அலுவலர்களுக்குத்‌ தெரிவிக்கப்பட்‌டது. அதில் கீழ்க்காணும்‌ மாவட்டங்களிலிருந்து தகவல்‌ ஏதும்‌ பெறப்படவில்லை என்றும்‌, ஒருசில மாவட்டங்களிலிருந்து அரைகுறையான தகவல்‌ மட்டுமே பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து மனுதாரர்‌ தனது மனுவில்‌ மேல்முறையீடு செய்துள்ளார்‌. ஆகவே, கீழ்க்காணும்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகப்‌ பொதுத்‌ தகவல்‌ அலுவலர்‌, மனுதாரர்‌ கோரும்‌ தகவலைச் சார்நிலை அலுவலகங்களில் இருந்து பெற்றுத் தொகுத்து தங்கள்‌ அலுவலகத்திலிருந்தே மனுதாரருக்கு நேரடியாக அனுப்பும்‌ பொருட்டு மனுதாரரின்‌ மேல்முறையீட்டு மனு இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படுகிறது.

தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டத்தின்‌ முக்கியத்துவம்‌ கருதி மனுதாரருக்கு உரிய காலத்திற்குள்‌ தகவல்‌ வழங்கிவிட்டு அதன்‌ விவரத்தை இந்த அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

1. செங்கல்பட்டு
2. சென்னை
3. கடலூர்‌ ‌
4. தருமபுரி
5. திண்டுக்கல்
6. காஞ்சிபுரம்‌
7. ஈரோடு
8. கன்னியாகுமரி
9. கரூர்

10. கிருஷ்ணகிரி
11. மதுரை
12.மயிலாடுதுறை
13.பெரம்பலூர்
14.புதுக்கோட்டை
15.ராமநாதபுரம்
16. ராணிப்பேட்டை
17.சேலம்‌
18. சிவகங்கை
‌19. தென்காசி
20. திருச்சி
21. திருப்பத்தூர்
22.திருவாரூர்‌‌
23.திருவண்ணாமலை
24.வேலூர்‌ ‌
25.விருதுநகர்‌


ஆகிய மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள் மனுதாரர் கோரிய தகவல்களை அனுப்ப வேண்டும்’’.

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog