Summer Internship in Epigraphy (M) for the year 2026 - 2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் (ம) சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி
Event: Summer training on epigraphy and manuscriptology for 2026.
Organizer: International Institute of Tamil Studies, Chennai.
Application Deadline: June 10, 2026, by 5:00 PM.
Training Start Date: June 15, 2026.
2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் (ம) சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழிலக்கியம் (ம) சுவடியியல் புலம் சார்பில் ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டியல் குறித்த கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் சூன் 15ஆம் தேதி முதல் 20 நாட்கள் (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் சுவடிகளைப் பாதுகாப்பது. படியெடுப்பது, பதிப்பிப்பது ஆகியவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தின் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிய இலக்கியங்கள் போல பாறைகளிலும் கோயில்களிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் காலப் பழைமையுடையது. இதனைப் படிப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். தமிழ் இலக்கியம். பண்பாடு. வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வோர் இப்பயிற்சி வகுப்பில் பயன் பெறலாம். முதலில் வரும் 30 பங்கேற்பாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தினை நிறுவன வலைத்தளம் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்காணும் நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : இல்லை
விண்ணப்பிக்க இறுதி நாள் 10.06.2026 மாலை 5 மணிக்குள்
பயிற்சி தொடங்கப்பெறும் நாள் : 15.06.2026
நிறைவு செய்த விண்ணப்பங்கள் இயக்குநர்
அனுப்ப வேண்டிய முகவரி :
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாம் முதன்மைச் சாலை மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.