ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் டிச.,14 வரை நீட்டிப்பு.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்வதற்கான காலக்கெடு டிச.,14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை அப்டேட் செய்வது கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்தது.
பொதுமக்களின் வசதிக்காக, மை ஆதார் போர்ட்டல் வழியாக, ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்வதற்கான அவகாசம் செப்,14ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிச.,14ம் தேதி வரை மை ஆதார் போர்ட்டலில் ஆதார் தகவல்களை எளிதாக ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம்.
ஆதார் சேவை மையங்களுக்கு சென்றால் ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். *ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?*
1.முதலில் https://myaadhaar.uidai.gov.in/
இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.
2.அடுத்ததாக, லாக் இன் செய்து, பெயர்/ பாலினம்/ பிறந்த தேதி/ முகவரி அப்டேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3.அடுத்ததாக அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4. முகவரி சான்று, அடையாள சான்று நகலை பதிவேற்ற வேண்டும்.
5.ஆதார் பதிவு செய்த எண்ணுக்கு, சர்வீஸ் ரெக்வஸ்ட் எண் (எஸ்.ஆர்.என்) குறுஞ்செய்தியாக வரும்.
ஆதார் அப்டேட் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள 1947 என்ற டோல்ப்ரீ எண்ணுக்கு அழைக்கலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.