மின்வாரியத்தில் காலியாக உள்ள 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முன்பு அறிவிக்கப்பட்டிருந்த பணியிட அறிவிப்புகள் பற்றிய விவரம் கீழே
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், `கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் போன்ற காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அண்மையில் சட்டப்பேரவையில், அனைத்து அரசு நிறுவனங்களின் ஆள் சேர்ப்பையும் டி.என்.பி.எஸ்.சி. மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டதால் மின்வாரிய ஆள் சேர்ப்பு அறிவிப்பாணைகள் ரத்து செய்யப்படுகிறது. கணினி வழித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கான கட்டணம் திருப்பித் தரப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.