2022 SSC எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 29, 2022

Comments:0

2022 SSC எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கண்டிப்பாக தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது

பட்டப்படிப்பு, மேல்நிலைப்பள்ளி நிலை, மெட்ரிக் பள்ளி ஆகிய மூன்று நிலை பணியிடங்களுக்கான பேஸ் X / 2022 / நியமன (Phase X/2022/Selection Posts) தேர்வுகளை 2022 ஆகஸ்ட் 1 முதல், 5 வரை கணினி அடிப்படையில் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ளது. பணியாளர் தேர்வாணையத்தின் சென்னையில் உள்ள தென் மண்டலத்தில் 31 பிரிவுகளின் கீழ் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு தென்மண்டலத்தில் 45,773 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு நடைபெறும் 5 நாட்களில், ஒவ்வொரு நாளும், 4 ஷிப்டுகளில் தேர்வு நடைபெறும். முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 10 மணி வரை, 2-வது ஷிப்டு 11:45 மணி முதல் 12:45 மணி வரை, 3-வது ஷிப்டு பிற்பகல் 02:30 மணி முதல் 03:30 மணி வரை, 4-வது ஷிப்டு மாலை 05:15 மணி முதல் 06:15 மணி வரை நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையம் தென்மண்டல இயக்குநர் கே நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதிச் சீட்டு:

மின்னணு முறையில் அனுமதி சான்றிதழ்கள் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தேர்வாளர்களின் சரியான தேர்வுத் தேதிக்கு 4 நாட்கள் முன்னதாக மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். இதற்கான விவரங்கள் தேர்வாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முறையிலும் அனுப்பிவைக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள்:

கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை கண்டிப்பாக தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் தேர்வாளரின் அனுமதி ரத்து செய்யப்படுவதோடு குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், 3 முதல் 7 ஆண்டுகள் வரை ஆணையத்தின் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தடை செய்யப்படும்.

மின்னணு முறையிலான அனுமதிச் சான்றிதழ் மற்றும் செல்லுபடியாகும் மூல அடையாள சான்றிதழ் இல்லாதவர்கள் கண்டிப்பாக தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விவரங்களை அறிய தென்மண்டல அலுவலகத்தின் 044 – 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94451 95946 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

கொவிட் -19 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் தென்மண்டல இயக்குநர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews