SSC தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 18, 2023

Comments:0

SSC தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Staff_Selection_Commission_Logo
ssc தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எஸ்.எஸ்.சி. தேர்வாணையம் அறிவித்துள்ள எம்டிஎஸ் (மல்டி டாஸ்கிங் ) தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 26ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை எஸ்எஸ்சி அறிவித்தது.

விண்ணப்ப செயல்முறை கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், நேற்று கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பித்தாரர்கள் விண்ணப்பித்தனர். இதனால், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால், இணையதளம் முடங்கியது.

இயங்காத இணையதளத்தை எஸ்எஸ்சி ஆணையம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான கடைசி தேதியை எஸ்எஸ்சி தேர்வாணையம் நீட்டித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி. மல்டி டாஸ்கிங் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ssc.nic.inஎன்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84696178