Breaking

Monday, April 08, 2024

கள்ளழகர் திருவிழா: பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு



கள்ளழகர் திருவிழா: பள்ளித் தேர்வு ஒத்திவைப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதில், ஏப்ரல் 19- ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் பட்டாபிஷேகமும், மறுநாள் 20- ஆம் தேதி திக்குவிஜயமும், அடுத்த நாள் 21-ஆம் தேதி திருக்கல்யாணமும், 22- ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வுகளான கள்ளழகா் எதிா்சேவை ஏப்ரல் 22 ஆம் தேதி இரவும், ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப். 23-ல் நடக்கவிருந்த பள்ளித் தேர்வு ஏப். 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog