Pongal festival - January 17th should be declared a holiday - Sangam requests the government - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 29, 2024

Comments:0

Pongal festival - January 17th should be declared a holiday - Sangam requests the government

பொங்கல் பண்டிகை - ஜனவரி 17-ந்தேதியை விடுமுறையாக விடவேண்டும் - அரசுக்கு சங்கம் கோரிக்கை

பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) முதல் 16-ந்தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வேலை நாளாக அமைந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து வரும் 18 மற்றும் 19-ந்தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் விடுமுறை நாட்களாக உள்ளன.

இந்த நிலையில் முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், 17-ந்தேதி ஒரு நாளை மட்டும் விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால், வெளியூர்களுக்குச் சென்று பண்டி கையை குடும்பத்துடன் கொண்டாடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கூடுதல் விடுமுறை (14-ந்தேதியில் இருந்து 19- ந்தேதிவரை 6 நாட்கள்) கிடைப்பதால் மகிழ்ச்சியடைவார்கள். எனவே இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 17-ந்தேதியை விடுமுறை நாளாக அரசு அறிவிக் கும்பட்சத்தில், அந்த வாரத்தில் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மட்டுமே வேலை நாளாக உள்ளது. அந்த நாளை மட்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பாக எடுத்துக்கொண் டால், 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதிவரை தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews