பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு - AICTE வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 14, 2023

Comments:0

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு - AICTE வெளியீடு

பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற வழிகாட்டி கையேடு: அடுத்த 3 ஆண்டுகளுக்கான வரைவு அறிக்கையை ஏஐசிடிஇ வெளியிட்டது

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறைகள் அடங்கிய 3 ஆண்டு வழிகாட்டி கையேட்டின் வரைவு அறிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள் ளது.

இந்தியாவில் ஏஐசிடிஇ-ன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளுக்கான செயல்முறை விதிகளை ஏஐசிடிஇ ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. இந்த விதிகளை முறையாகப் பின்பற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்குத்தான் தொடர் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதியை ஏஐசிடிஇ வழங்கும். இந்நிலையில், முதல்முறையாக கல்லூரிகளுக்கு 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் அளிக்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிமுறைகள் அடங்கிய புதிய வழிகாட்டு கையேட்டின் வரைவு அறிக்கையை (2024-27) வடிவமைத்து, ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் 286 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான செயல் முறைகள், விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

திருத்தப்பட்ட செயல்முறைகள்: புதிய கல்லூரிகள், படிப்புகள்தொடக்கம் மற்றும் அங்கீகார நீட்டிப்புக்கான திருத்தப்பட்ட செயல் முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி டிப்ளமோ, சான்றிதழ், இளநிலை, முதுநிலைப் படிப்புகளைத் தொடங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் அனுமதி கோரலாம். மேலும், ஒரு கல்வி நிறுவ னத்தை மூடும் கல்லூரிகள், அதே கல்வியாண்டில் வேறொரு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கலாம். மாணவர்களுக்கு சிறந்த கற்றலை வழங்க ஏதுவாக கல்வியாளர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவின் ஒத்துழைப்புடன், தகுதியான ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட சார்ந்த கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

மேலும், முறையான அங்கீ காரம் பெறாத கல்லூரிகள் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும். அதே போல, ஒரு கல்லூரியானது ஓராண்டுக்கும் மேலாக முதல்வர் இல்லாமல் இயங்கினால், அந்த இடத்துக்கு தகுதியான நபர் நியமிக்கப்படும் வரை மாணவர் சேர்க்கைக்கான அனுமதி தற் காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்பன உட்பட பல்வேறு கருத்துருக்கள் வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வரைவறிக்கை தொடர்பான தங்களின் கருத்துகளை கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் www.aicte-india.org/ எனும் இணையதளம் வழியாக நவம்பர் 17-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews