தண்டவாளத்தில் தலை வைத்து தலைமை ஆசிரியை தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 09, 2023

Comments:0

தண்டவாளத்தில் தலை வைத்து தலைமை ஆசிரியை தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து தலைமை ஆசிரியை தற்கொலை Headmistress committed suicide by hanging her head on the rail

கோவை மாவட்டம் துடியலூர் அருகே வெள் ளக்கிணறு மாரியம்மன் நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து (60). தனி யார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயராணி (52). 2 மகள் களுக்கும் திருமணமாகிவிட்டது. விஜயதாரணி வெள்ளக்கிணறில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவர் மதியம் 12மணியளவில் வெள்ளகிணறு அருகே மேட்டுப்பா ளையத்தில் இருந்து கோவை சென்ற பயணிகள் ரயில் முன்பு படுத்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு தண்டவாளங்களுக்கு இடையே படுத்தபடி தலையை மேல்பகுதியில் வைத்து இரண்டு கைகளையும் சேர்த்து புடவையால் முகத்தை மூடிய நிலையில் படுத்து தற் கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு பள்ளியில் காமராஜர் விழா நடத்துவது, கட்டுமான பணி குறித்து பேசியுள்ளார். மேலும் ஒரு சிலரிடம் பேசியபடி சாலையில் நடந்து சென் றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றியுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84411734