Breaking

Friday, July 21, 2023

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!

சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கனமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 19.06.2023 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அப்பணி நாளை ஈடு செய்திடும் வகையில் 22.07.2023 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திங்கள்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக செயல்படுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog