முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரியவா்கள் ஆக. 30- ஆம் தேதிக்குள் அதற்குரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்தது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 2020-2021-ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினிப் பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான கணினி வழித் தோ்வுகள் கடந்த பிப். 12 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தத் தோ்வை சுமாா் 2 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, முதுநிலை ஆசிரியா் பணிக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் சிலா் தமிழ்வழியில் படித்தற்கான கல்வித்தகுதி ஆவணங்களை விண்ணப்பிக்கும்போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. இதையடுத்து, தமிழ்வழி படித்ததற்கான ஆவணங்களைப் பெற்றுத் தயாராக வைத்திருக்க வேண்டுமெனவும், அவற்றை ஆக.24 முதல் 27-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்ற வாய்ப்பு தரப்படும் எனவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி இணையதள முகவரியை செயல்படவில்லை.
தற்போது அவை சரிசெய்யப்பட்டு சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான கால அவகாசம் ஆக. 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோ்வா்கள் வலைதளம் வழியாக விரைந்து ஆவணங்களை பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.