முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம் 2020-2021
2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1/ கணினிப் பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1202.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.072022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன.
25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
17 பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள் அசல் ஆதார் அட்டை மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது) அழைப்புக் கடிதம் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும்.
செல்போன்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.