முதுநிலை ஆசிரியர் நியமனம்: வயதுவரம்பில் தளர்வுகள் அதிகரித்து அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

முதுநிலை ஆசிரியர் நியமனம்: வயதுவரம்பில் தளர்வுகள் அதிகரித்து அறிவிப்பு

"பள்ளி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயதுவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வு 2022 இறுதிவரை மட்டுமே பொருந்தும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளியின் ஆசிரியர் பணி நியமனத்திற்கான எந்தவித நேரடி நியமனத்திற்கான அறிவிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பணி நியமனத்திற்கான உச்ச வயதுவரம்பினை பணி அறிவிப்புக்காக காத்திருந்த பலர் தாண்டிவிட்டனர். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் 40 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனப் பல தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், பள்ளி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயதுவரம்பினை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 முதல் 45 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45 முதல் 50 ஆகவும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வயது வரம்பு நீட்டிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். மேலும் இந்த உச்ச வயது வரம்பினை அறிவிப்பை வரும் 31.12.2022 அன்று வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்குப் பொருந்தும்.

2023 ஜனவரி 1 முதல் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி கடைசி தேதி அக்டோபர் 17 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கடைசி தேதியை அக்டோபர் கடைசி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு ஆணை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. "

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews