தமிழகத்தில் வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!
பொது விநியோகத் திட்டம் - நியாய விலைக் கடைகளுக்கு 30.07.2023 அன்று பணி நாளாகவும், அதற்கு ஈடாக 26.08.2023 அன்று விடுமுறை நாளாக மாற்றியமைத்தல் - தொடர்பாக.
நிர்வாக காரணங்களுக்காக, அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 30.07.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணி நாளாகவும், அதற்கு ஈடாக 26.08.2023 (சனிக் கிழமை) அன்று விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 24 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 20,765 நியாய விலைக் கடைகளில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிக்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 30) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பணிநாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.