Breaking

Thursday, September 07, 2023

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற 18ஆம் தேதி இதற்கு விடுமுறை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற 18ஆம் தேதி அனைத்து நியாய விலை கடைகளுக்கும் விடுமுறை.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையான செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விடுமுறைப் பட்டியலின்படி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான விடுமுறை செப்டம்பர்17-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.இது தற்போதுசெப்டம்பர்18-ஆம் தேதி என மாற்றி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் விநாயகர் சதுா்த்தி பண்டிகையானது செப். 18-ஆம் தேதிதான் கொண்டாடப்படுவதாக பல்வேறு கோயில்களின் நிா்வாகிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் செப்டம்பர் 18 ஆம் தேதி(திங்கள்கிழமை)விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog