Breaking

Wednesday, June 21, 2023

பிளஸ் 1 மறுகூட்டல்: ரிசல்ட் இன்று வெளியாகிறது

பிளஸ் 1 மறுகூட்டல்: ரிசல்ட் இன்று வெளியாகிறது

பிளஸ் 1 தேர்வுக்கு பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று மதியம் ரிசல்ட் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நடந்தது. அந்த தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியரில் சிலர், தங்களுக்கு மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்தனர். அதில் மறுகூட்டல் செய்ததில் சிலருக்கு மதிப்பெண் மாற்றம் வந்துள்ளது.

அவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று மதியம் வெளியிடப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம்பெறாத மாணவ, மாணவியருக்கு விடைத்தாளில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மறுகூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog