Breaking

Tuesday, August 23, 2022

இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் பயிற்சி முகாம்

இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் பயிற்சி முகாம்

மதுரையில் இல்லம் தேடிக்கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கு நான்காம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

மதுரை தென்சரகம், என்.எஸ்.எம். உயா்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வித்திட்ட தன்னாா்வலா்களுக்கான நான்காம் கட்டப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை வட்டாரக் கல்வி அலுவலா் சீனிவாசன் தொடக்கி வைத்துப்பேசினாா்.

சிறப்பாக கற்றல் உபகரணங்களைக் காட்சிபடுத்திய தன்னாா்வலருக்கு வட்டாரக்கல்வி அலுவலா் மோசஸ் பெஞ்சமின் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். பயிற்சி முகாமில் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் , எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டத்தின் குறைதீா் கற்பித்தல் எப்படி வழங்குவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், வட்டார வள மையத்தின் மேற்பாா்வையாளா் ரேகா, மாநில கருத்தாளா் க.சரவணன், ஐ.டி.கே வட்டார வைரமுத்து, ஐடிகே மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரெ. சிவகுருநாதன் ஆசிரியா் பயிற்றுநா்கள் உமா மகேஸ்வரி , க.முத்துமாரி, சொ. தனமீனாட்சி, கா.ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog