அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி சென்னை ஐஐடி திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2024

Comments:0

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி சென்னை ஐஐடி திட்டம்



அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி சென்னை ஐஐடி திட்டம்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உள்படபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழி காட்டுதல் பயிற்சிகளை அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.

'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளுடன் தொடர்புடைய பணிகளில் மாணவர் களை ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் சென்னை ஐஐடி சார்பில் வழி காட்டுதல் பயிற்சிகள் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், உத் தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட் டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்

https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.


இது குறித்து சென்னை ஐஐடி உயிரித் தொழில்நுட்பத் துறை பேரா சிரியர் வி.சீனிவாஸ் கூறியதாவது: சற்று கடினமான அறிவியல் கருத்து கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 'பாப்பு லர் சயின்ஸ்' எனும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

அதன் கீழ், 9,193 அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் தொடர்பான 3,20,702 புத்தகங்களை வழங்கியுள்ளோம். அவை ஆங்கிலம் மட்டுமல் லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் விரும்பும் துறை களில் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2026-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.


அடுத்த 3 ஆண்டுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழிகாட்டு பயிற்சி: சென்னை ஐஐடி திட்டம் Career guidance training for 50,000 government school students within next 3 years: Chennai IIT Project

அறிவியலை பிரபலப்படுத்தும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகள் தொடர்பான தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சென்னை ஐஐடி, தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை இலவசமாகச் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு 3 லட்சத்து 20 ஆயிரத்து 702 புத்தகங்களை ஐஐடி வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html என்ற இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் வி.சீனிவாஸ் கூறுகையில், “சிக்கலான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய அனைத்துத் தரப்பினரும் அணுகக் கூடிய ஒரு பாலமாக ‘பாப்புலர் சயின்ஸ்’ திட்டம் அமைந்துள்ளது.

9,193 கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் 3,20,702 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். இவை ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் தற்போது கிடைக்கிறது.

மாணவர்கள் விரும்பும் துறைகளைப் பற்றி தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படுகின்றன. 2026-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews