கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’ GATE Result Released: 12 Candidates 'Hundred Per Hundred'
கேட் நுழைவுத் தேர்வில் 12 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐஐஎம் போன்ற தேசிய அளவிலான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர, கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் கடந்த நவம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. 2.58 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகளை கோழிக்கோடு ஐஐஎம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில், 12 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 26 பேர் 99.99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் தேர்ச்சியில் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
கேட் தேர்வு முடிவுகளை iimcat.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கட்ஆஃப் மதிப்பெண் 90-க்கு மேல் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கேட் மதிப்பெண் மூலம், ஐஐஎம் மட்டுமின்றி, 93 இதர உயர்கல்வி நிறுவனங்களிலும் மேலாண்மை படிப்புகளில் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
GATE 2025 மற்றும் 2026 தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
GATE 2025 தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்ட தேதி: GATE 2025 தேர்வு முடிவுகள் மார்ச் 19, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
மதிப்பெண் அட்டை (Scorecard): தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் அட்டையை மார்ச் 28, 2025 முதல் மே 31, 2025 வரை இணையதளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இணையதளம்: gate2025.iitr.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம்.
GATE 2026 தேர்வு முடிவுகள் (எதிர்பார்ப்பது)
தேர்வு நாட்கள்: பிப்ரவரி 7, 8, 14 மற்றும் 15, 2026 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
முடிவு வெளியீடு: GATE 2026 தேர்வு முடிவுகள் மார்ச் 19, 2026 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளம்: முடிவுகளை gate2026.iitg.ac.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
முடிவுகளைச் சரிபார்க்கும் முறை:
GATE அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
'GATE Result' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவு எண் (Enrollment ID) அல்லது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிடவும்.
திரையில் தோன்றும் உங்கள் முடிவைப் பார்த்து, தேவையான நகலை எடுத்துக்கொள்ளவும்.
Search This Blog
Sunday, December 28, 2025
Comments:0
கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.