கேட்-பி நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 01, 2021

Comments:0

கேட்-பி நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

கேட்-பி நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

சென்னை, ஜூலை 31: ‘கேட்-பி' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த வர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளலாம் என தேசிய தேர் வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) படிப்புகளில் சேருவதற்கான ‘கேட்-பி' என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பயோடெக்னாலஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெற பிஇடி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆகஸ்ட் 14-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருப் பின் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான மூன்று நாள்களுக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை dbt.nta.ac.in, www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
IMG_20210801_215623

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602015