'கேட்' தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கப் பயிற்சி வகுப்புகள் - முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

'கேட்' தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கப் பயிற்சி வகுப்புகள் - முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

'கேட்' தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கப் பயிற்சி வகுப்புகள் - முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜூலை 2: உயர் கல்விக்கான கேட்' தேர்வில் தமிழக மாணவர் களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசின் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய அம் சங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர்களின் சேர்க்கை சில மாவட்டங்க ளில் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையை சீர்செய்யும் விதமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவா திக்கப்பட்டது.
தாலுகாக்களில் கல்லூரிகள்: வேலைவாய்ப்புக்கு உகந்த பாடத் திட்டங் களை அறிமுகப்படுத்தவும், தேவையான தாலுகாக்களில் புதிய கல்லூரிக ளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப் பது குறித்தும், 'கேட்'தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பயிற்சி வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் விதமாக, உட்கட் டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும், திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் மின் ஆளுமைத் திட்டத்தைச் செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

மின்னணு நூலகங்கள்:
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்தவும், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. கலை, அறிவியல் கல்லூ ரிகளில் மின்னணு நூலகங்களை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்த நிலையான நிதி மேலாண்மையை உருவாக்கி நிதிச் சுமையை சீராக்கவும் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, தலை மைச்செயலாளர் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச்செயலா ளர் எஸ்.கிருஷ்ணன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த் திகேயன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலை.யில் ட்ரோன் கார்ப்பரேஷன்: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ட்ரோன் கார்ப்பரேஷன் நிறுவ ஆலோ சிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய முயற்சியாக அரசின் உதவியுடன் அனைத்துத் துறைகளிலும் ட்ரோன்களைப் பயன்படுத்தும் விதமாக புதிய ட்ரோன் கார்ப்பரேஷன் நிறுவ ஆலோசிக்கப்பட்டதாக அரசின் செய்தி யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews