தொலைதூரக் கல்வி சேர்க்கை பிப். 28 வரை நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 22, 2025

Comments:0

தொலைதூரக் கல்வி சேர்க்கை பிப். 28 வரை நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.%2028%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%20


Distance education admissions extended till Feb. 28: IGNOU announcement - தொலைதூரக் கல்வி சேர்க்கை பிப். 28 வரை நீட்டிப்பு: இக்னோ அறிவிப்பு

தொலைதூரக் கல்வி ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. 2025 ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 28 வரை சேர்ந்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இக்னோவில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84627276