கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 05, 2026

Comments:0

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!



கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்: முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! Laptops for college students: The Chief Minister will launch the scheme tomorrow!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நாளை மாலை 3 மணியளவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "திராவிட மாடல் அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்வர் தலைமையிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் நாளை மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

“கல்வி அனைவருக்கும்! உயர்வு ஒவ்வொருவருக்கும்!” என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக–பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் “புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு ஜன.5ம் தேதி மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ஜனவரி 5ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தவும், தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியை அனைவருக்கும் எளிதாகக் கொண்டு செல்லவும், கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மொத்தம் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கணினிகள் வழங்கப்படுவதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள், கல்வி சார்ந்த ஆய்வுகள், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்றவற்றில் மாணவர்கள் சிறப்பாக ஈடுபட முடியும். மேலும், தொழில்நுட்ப அறிவு சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இந்தத திட்டம் துணை நிற்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்தை உறுதி செய்யும் வகையில் மடிக்கணினி வழங்கும் திட்டம் வெளிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews