பிப்ரவரி 16-இல் தமிழக முதல்வர் இல்லம் முற்றுகை - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு Tamil Nadu Chief Minister's residence siege on February 16 - Abolition of CPS movement announced
மதுரை, பிப். 11 : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, வருகிற 16-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தப் போவதாகசிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்டக் கூட்டத்தில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் பேசியதாவது: திமுகவின் தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரி யும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே, தேர் தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி வருகிற 16-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
பல்வேறு மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தமிழகத்தில் திமுக அரசு ரத்து செய்ய மறுத்து வருகிறது. போராட் டத்துக்குப் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாதபட்சத்தில், அடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்ப டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.