அரியலூரில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூரில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆண்டுதோறும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் அன்று பெருவிழா எடுத்து மக்கள் சிறப்பித்து வருகின்றனர். ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டினார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதால் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னமாக இதனை அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதையும் படிக்க | "ஆசிரியர்களுக்கு சுதந்திரம், பணிப்பாதுகாப்பு வேண்டும்" - ஆசிரியர்கள் சங்கம்
இந்த நிலையில் நாளை ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து நாளை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.