ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாலும், அதனால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்கவும், மக்களுக்கு கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசியை போடுவது பற்றி மத்திய அரசின் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக் குழு இன்று சந்தித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது.
கூடுதல் டோசாக போடலாமா அல்லது பூஸ்டர் டோஸ் போடலாமா என்பது பற்றி இந்த குழுவின் நிபுணர்கள் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர். அதே போன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் துவங்குவது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் என்பது முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தடுப்புத் திறன் குறைவதை சமாளிக்க போடப்படுவதாகும்.
ஆனால் கூடுதல் டோஸ் என்பது தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்புத் திறனை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்கு போடப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒமிக்ரான் பரவும் பின்னணியில் பூஸ்டர் வேண்டுமா அல்லது கூடுதல் டோஸ் போடலாமா என நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.