பருவ கால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றை கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக் கூடாது. மாறாக, அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கக் கூடும்.
எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி மருத்துவக் கண்காணிப்பை அளிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், அவா்களுக்கு அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம். ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அவா்களையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துதல் அவசியம்.
மூன்றாவதாக தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.
ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.