Breaking

Wednesday, July 01, 2026

பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியல் - 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 06.07.2026-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்

தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியலினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்



பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியல் - 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 06.07.2026-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்

தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியலினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்

இன்று 01.07.2026 சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியலினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார். பின்னர், மாண்புமிகு உயர்கல்வித் செய்தியாளர்களிடம் பேசியதாவது: துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியல் இன்று (01.07.2026) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு செய்து, பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்கள் 2,45,235. இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணவர்கள் 1,30,767, மாணவிகள் 1,05,245, மூன்றாம் பாலினத்தவர் 5 ஆக மொத்தம் 2,36,017.

இந்த ஆண்டு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 50,494 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பள்ளிகல்வி துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 46,604 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 7,981 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 3,210 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,176 மாணாக்கர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 500 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

200-க்கு 200-கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 53. அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்கள் 39 மற்றும் மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 14. மாணாக்கர்கள் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 6 நாட்களுக்குள் அதாவது 06.07.2026-க்குள் தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC's) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று 06.07.2026-க்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம்.

மாணாக்கர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தின் 1800-425-0110 என்ற எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளலாம். இதுவரையில் அழைப்பு மையத்தின் வாயிலாக 32,843 மாணாக்கர்கள், மின்னஞ்சல் வாயிலாக 10,125 மாணாக்கர்கள் மற்றும் நேரடியாக 1,497 மாணாக்கர்க்கும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார். இந்நிகழ்வின் போது, உயர்கல்வித்துறை அரசு செயலாளர் திரு. வி. அருண் ராய், இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இயக்குநர் திரு. பொ. இரத்தினசாமி இ.ஆ.ப., செயலாளர் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை முனைவர் தி. புருசோத்தமன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog