தமிழகத்தில் மக்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது - நமக்கு நாமே படிவம் பூர்த்தி செய்ய வசதி -
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 'ஆன்லைன்' வாயிலாக நமக்கு நாமே சுய விபரங்களை பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் தங்களின் சுய விபரங்களை பதிவு செய்து பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 தொடங்குகிறது. அதன் முதற்கட்டமாக தமிழகத்தில் சுய கணக் கெடுப்பு பணிகள் முதல் முறையாக 'டிஜிட்டல்' முறையில் நடத்தப் படுகின்றன. பொது மக்கள் தங்களின் சுய விபரங்களை இணைய தளம் வழியாக வரும் சமர்ப்பிக்கலாம்.
山 கணக் கெடுப்பு வசதியை பயன் படுத்தாத குடும்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடக்கவுள்ள நேரடி வீட்டு கணக்கெடுப்பில் பங்கேற்று விபரங்களை அளிக்கலாம்.
சென்னை லோக் பவனில் ஆன்லைன் முறையில் தன் சுய விபரங்களை பதிவு செய்த பின் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் கூறியுள்ள தாவது: மக்கள்தொகை கணக் கெடுப்பை ஒரு தேசிய பொறுப்பாகக் கருதி ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் கணக்கெடுப்பில் பங் கேற்க வேண்டும்.
மாநில மற்றும் நாட்டின் எதிர் கால திட்டமிடலுக்கும். வளர்ச்சிக்கு தேவையான தரவுத்தளத்தை வலுப் படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு பங்க னிப்பை வழங்கும். கெடுப்பு அலுவலர் முழு ஒத்து ழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல் களை அளித்து கணக் அவசியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று தொடங்கி யது. இது வெறும் எண்ணிக்கை இல்லை; நீங்கள் வழங்கும் தகவல்கள் தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படை. அதேபோல சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தன் சுய விபரங்களை பதிவு செய்தார். பின் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நம் மாநிலத்தின் எதிர் கால வளர்ச்சி திட்டங் களை செயல்படுத்த எனவே ஒவ்வொரு குடும்பமும் உண்மை யான தகவல்களை கொடுக்க வேண்டும்.
இணையவழியில் கணக்கெடுப்பு செய்ய லாம். நான்பதிவுசெய்துள் ளேன்.உங்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப் படும். வாங்க வாங்க எல்லாரும் சேர்ந்து இதை வெற்றி கரமாக செய்து முடிப்போம். மக்கள் தலனுக்காகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு. இவ்வாறு கூறியுள்ளார். அவர் சுய விபரங்களை பதிவு செய்வது எப்படி 1.பதிவேற்றம்
சுய கணக்கெடுப்பில் விபரங்களை ញ់ ww https://se.census. gov.in என்ற இணையதளத்துக்கு சென்று மாநிலம் என்ற இடத்தில் தமிழகத்தை தேர்வு செய்ய வேண்டும். பின் திரையில் தோன்றும் 'கேப்ட்சா'வை பதிவு செய்ய வேண்டும்
2.குடும்ப பதிவு
8 குடும்ப தலைவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஐ-மெயில் முகவரி இருந்தால் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கலாம். ஒரு முறை பதிவு செய்த பின் குடும்ப தலைவரின் பெயரை பின்னர் மாற்ற முடியாது. ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு தொலைபேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு முறை பதிவு செய்தால் அதே எண்ணை வேறு எந்த குடும்பத்திற்கும் பயன்படுத்த முடியாது 3.மொழி மற்றும் ஓ.டி.பி., சரிபார்ப்பு
மொத்தம் 16 மொழிகளில் சுய விபரங்களை :=m பதிவு செய்யலாம். அதில் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும். பின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ.டி.பி., எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்
4.இருப்பிட்ட விபரம்
தங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து "பின்கோடு' மற்றும் தங்கள் பகுதியை குறிப்பிட வேண்டும் 5.இருப்பிட வரைபடம்
F உங்கள் சரியான குடியிருப்பு கட்ட்டத்தை அடையாளம் கண்டு இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும்
5.கேள்விகள்
வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு குறித்த 33 கேள்விகளை நிரப்ப வேண்டும்
7.மறு ஆய்வு
பதிவு செய்த அனைத்து தரவுகளையும் சரிபார்க்க முன்னோட்ட திரையை பயன்படுத்த வேண்டும். அதில் திருத்தம் செய்யலாம். பின் தரவுகளை சேமிக்கலாம் அல்லது இறுதி செய்யலாம்.
8.இறுதி சமர்ப்பிப்பு
உங்கள் தரவுகளை இறுதியாக சமர்பிக்க வேண்டும். அதன்பின் தரவுகளில் மாற்றம் செய்ய முடியாது. சமர்பிக்கப்பட்ட பின் தங்களின் தொலைபேசி எண்ணிற்கு சுய கணக்கெடுப்பு அடையாள எண் குறுஞ்செய்தியாக வரும் 9.கணக்கெடுப்பாளர் வருகை
80 80 ஆக.1ம் தேதி முதல் கணக்கெடுப்பாளர்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போது உங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை அவர்களிடம் பகிர வேண்டும். கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் சரி செய்வார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.