கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு; 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். - Press Release - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 26, 2023

Comments:0

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு; 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். - Press Release

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு; 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். - Publication of rank list for veterinary medicine and animal husbandry courses; 31 students scored 200 out of 200 marks.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னை - 600 051 பத்திரிகை செய்திக்குறிப்பு

நாள்: 26.07.2023

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSC & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வனத் தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 12.06.2023 முதல் 30.06.2023 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online application) வரவேற்கப்பட்டன. மொத்தமாக பெறப்பட்ட 22535 விண்ணப்பங்களுள், 18752 விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும் (BVSC & AH, 3783 விண்ணப்பங்கள், இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) பாடப்பிரிவிற்கும் முறையே பெறப்பட்டன. 2023-24ஆம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் 26.07-2023 அன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலின் விவரங்களை httrsim tanuvas.ac.in மற்றும் htlrstanuvas.ac.in இணையதளங்களின் வாயிலாக காணலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கு (கலையியல் பிரிவு) - BV5c & AH (Academic), 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவர் ராகுல் காந்த் எம். தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த கனிமொழி வி. தென்காசி மாவட்டத்தை சார்ந்த முத்துலட்சுமி எஸ், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த நந்தினி கே. திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த கிரேஸ் கிரிஷ்பு, தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விஷ்வா டி. அரியலூர் மாவட்டத்தை சார்ந்த வசந்தி வி. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த லோபாஷினி எம். அரியலூர் மாவட்டத்தை சார்ந்த சக்தி குமரன் எஸ் மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த கவுசிகா எஸ் ஆகிய 10 மாணவ / மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர். இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech) தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த விஷ்ணுபிரகாஷ் எம் 199.500 க்கு 200.000 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த மாணவி தர்ஷா (198.500) இரண்டாம் இடத்தையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த வர்ணஓவியா எம் (198,000) மற்றும் கடலூர் மாவட்டத்தை சார்ந்த லோகேஷ் குமார் பி (198,000) மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான (7.5%) முன்னுரிமை இடஒதுக்கீட்டு பிரிவின்கீழ், சேலம் மாவட்டத்தை சார்ந்த விக்னேஷ் கே மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த அஜய் எஸ் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த பானுபிரியா வி (199.500) மற்றும் மதுரை மாவட்டத்தை சார்ந்த நித்யா டி (199.500) பெற்று இரண்டாம் இடத்தையும் மதுரை மாவட்டத்தை சார்ந்த தாமரை செல்வி ஆர் பி (198.500) மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த சிவா வி (198.500) அவர்கள் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (BVSC & AH) மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (BTech - உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்காலிக தரவரிசை பட்டியல் பற்றி ஏதேனும் விசாரணை இருப்பின் தொலைபேசி எண். 044 - 2999 4348 / 2999 4349 அழைக்கவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews