TNPSC has announced that the syllabus for Group 2 and Group 4 exams has been changed. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 14, 2024

Comments:0

TNPSC has announced that the syllabus for Group 2 and Group 4 exams has been changed.



குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

எப்படியாவது அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு.

குறிப்பாக அதிக காலியிடங்கள் அறிவிக்கப்படும் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

இந் நிலையில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews