4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 02, 2023

Comments:0

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்!

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு: நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்!

4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அடிப்படையில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில்(என்.சி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.

இந்த கல்வியாண்டுக்கான என்.சி.இ.டி. நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இணையதள வாயிலாக தற்போது தொடங்கி உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் https://ncet.samarth.ac.in இணையதள வாயிலாக ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 34 உதவி மையங்களை என்.டி.ஏ. அமைத்துள்ளது. அந்த வகையில் சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ், ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்.டி.ஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் சென்று இலவசமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 20, 21 ஆம் தேதிகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினிவழி மூலம் தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews