முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Applications are invited for the Chief Minister's Computer Tamil Award by December 31st.
தமிழக தமிழ் வளர்ச்சித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கணினித் தமிழ் வளர்ச்சிக் காக சிறந்த தமிழ் மென் பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 'முதல்வர் கணினித் தமிழ் விருது' வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதி யுரை ஆகியவற்றை கொண்டது. இந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான முதல்வர் கணி னித் தமிழ் விருதுக்கு தனிநபர் கள், நிறுவனங்களிடம் இருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென் பொருள்கள், செயலிகள் வர வேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படும் மென்பொருள்கள் 2025-ம் ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டு களுக்குள் தயாரிக்கப்பட்ட தாக இருக்க வேண்டும். இதற் கான விண்ணப்பம், விதிமுறை களை தமிழ் வளர்ச்சித் துறை இணையதளத்தில் (www. tamilvalarchithurai.tn.gov.in) பதி விறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்தை, உரிய ஆவணங் களோடு 'தமிழ் வளர்ச்சி இயக் குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600008' என்ற முக வரிக்கு அஞ்சல் மூலமாக டிசம் பர் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.