சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்கும் நலத்திட்டத்தை நிதி உதவி பள்ளிகளுக்கும் வழங்க - "தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு" - கோரிக்கை
📌சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகமுதல்வர் கூறியதாக வந்துள்ள பத்திரிக்கை செய்திகளில் கிராமப்புற
சிறுபான்மை நிதிஉதவி பள்ளிகளில்
1-5 வகுப்பு மாணவர்களுக்கு
காலை சிற்றுண்டி திட்டம்
மற்றும் 6-12 தமிழ்வழியில் பயின்ற சிறுபான்மை நிதியுதவி பள்ளிகளில்
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்,
பணிநியமன வயது தளர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு
நிரந்தர அங்கீகாரம் வழங்குதல்
குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளிவரும் என அறிவித்துள்ளதாக வந்துள்ளது.
📌இது மதசார்பற்ற, சமதர்ம, சமூகநீதி கொள்கைக்கு முரணாக உள்ளது.
📌ஆகவே இது போன்ற நலத்திட்டங்களை நீட்டித்தால் அதை அனைத்து நிதிஉதவி பள்ளிகளுக்கும் சேர்த்தே வழங்க வேண்டும்.
📌சிறுபான்மை - சிறுபான்மையற்ற எனப்பாகுபாடு காட்டக்கூடாது
📌அனைத்து நலத்திட்டங்களையும் சிறுபான்மையினருக்கு தருவது போல மற்ற அரசு நிதிஉதவிப் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும்.
📌ஏனெனில் அனைத்து பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது சமூக நீதியாக கருத இயலாது.
📌எனவே சிறுபான்மையினர் பள்ளிக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு இருக்க வேண்டும்
என
தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கேட்டுக் கொள்கிறது
நன்றி
Search This Blog
Sunday, January 14, 2024
Comments:0
Home
Aided schools
ASSOCIATION
சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்கும் நலத்திட்டத்தை நிதி உதவி பள்ளிகளுக்கும் வழங்க - "தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு" - கோரிக்கை
சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்கும் நலத்திட்டத்தை நிதி உதவி பள்ளிகளுக்கும் வழங்க - "தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு" - கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.