Appointment of surplus teachers in aided schools canceled on CEO's retirement day! உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணி நிரவல் நியமனம் சிஇஓ ஓய்வுபெறும் நாளில் போட்ட உத்தரவு திடீர் ரத்து!
நெல்லை முதன்மைகல்வி அலுவலர் ஓய்வு பெறும் நாளில் உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் மூலம் மாறுதலின் நியமனம் செய்து வழங்கிய செயல்முறை உத்தரவை தற்போதைய பொறுப்பு முதன்மைக்கல்வி அலுவலர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி கல்வி மாவட்ட அலுலவராக பணியாற்றிய கணேஷ் பதவி உயர்வு பெற்று கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நெல்லை முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றார். 49 நாட்களே இங்கு பணியாற்றிய நிலையில் ஜூலை 31ம் தேதி அவர் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெறும் நாளில் அவர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி மாறுதல் நியமனத்திற்கான உத்தரவு வழங்கினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.