Breaking

Thursday, March 19, 2026

அரசு பள்ளி ஆசிரியையிடம் 3 சவரன் செயின் பறிப்பு

அரசு பள்ளி ஆசிரியையிடம் 3 சவரன் செயின் பறிப்பு

கும்மிடிப்பூண்டி, மார்ச் 17-

அரசு பள்ளி ஆசிரியையிடம், 3 சவரன் செயின் பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கோமதி, 43. இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த அயநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகளை அழைத்து செல்வதற்காக, கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இரண்டு பேர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். கோமதியின் அல றல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் பைக் ஆசாமிகளை துரத்தினர். அவர்கள் பைக்கை விட் டுவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து கோமதி, கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், பைக்கை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்



This newspaper snippet describes an incident in Gummidipoondi where a government school teacher had her 3-sovereign gold chain snatched by two individuals on a motorcycle.

Incident: A 43-year-old teacher named Gomathi was targeted on March 17th while waiting for her daughter on the Balakrishnapuram bypass road.

Action: Two men on a bike snatched her 3-sovereign chain and fled, but bystanders chased them, causing the culprits to abandon their motorcycle and escape.

Police Investigation: A complaint was filed at the Gummidipoondi SIPCOT police station, and police have recovered the abandoned motorcycle to investigate

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog