பிளஸ் 1 ஆங்கிலம்: மறைமுக வினாக்களால் திணறிய மாணவர்கள்
சென்னை, மார்ச் 7: பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்துக்கான வினாத்தாளில் அதி களவிலான மறைமுக வினாக்கள் இருந்ததால் பதிலளிக்க சற்று சிரமமாக இருந்ததாக மாண வர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் நிறைவடைந்த பின்னர் இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு வியா ழக்கிழமை ஆங்கில பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் இதுவரை இல் லாத அளவுக்கு அதிகளவில் மறைமுக வினாக் கள் இடம்பெற்றிருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியது:
ஒரு மதிப் பெண் பகுதியில் மொத்தம் 20 வினாக்கள் இருந்தன; அவற்றில் 9,10, 12, 15, 20 शुभप ஐந்து வினாக்களும் நேரடியாக அல்லாமல் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டி ருந்தன. ௭. அதற்கு பதிலளிப்பது கடினமாக இருந் தது. அதேபோன்று இரு மதிப்பெண் பகுதி யில் 28 மற்றும் 30-ஆவது கேள்விகள் (இலக்க ணப் பகுதி) மறைமுக வினாக்களாக இருந்தன. இருப்பினும், மூன்று மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த அனைத்து வினாக்களுக்கும் எளிதாக பதிலளிக்க முடிந்தது. ஒட்டுமொத்த மாக ஆங்கில பாட வினாத்தாள் சற்று மாகவே இருந்தது என்றனர்.
கடின ஆங்கிலப்பாட ஆசிரியர்கள் கூறுகையில், தேர்வுகளில் மறைமுக வினாக்களை தவிர்க்க முடியாது என்றாலும், இந்த முறை மொத்தம் உள்ள 47 வினாக்களில் 8 முதல் 10 வினாக்கள் அவ்வாறு கேட்கப்பட்டிருந்தது மாணவர்க ளுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கும். எனினும், சராசரி மாணவர்கள் கூட இதில் மிக எளிதாக தேர்ச்சி பெற முடியும்; அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என அவர்கள் தெரி வித்தனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு வெவ்வேறுபாட திகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் செவ் வாய்க்கிழமை (மார்ச் 12) இயற்பியல், பொருளி யல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்க ளுக்கான தேர்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1 ஆங்கிலம் பாடத் தேர்வு கடினம்: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புபொதுத் தேர்வு கடந்த 4-ம் தேதிதொடங்கியது. நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. 3,302 மையங்களில் நடைபெற்றதேர்வில், 8.15 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 9,093 பள்ளி மாணவர்கள், 533 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9,626 பேர் தேர்வெழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு கடினமாக இருந்ததாகவும், அதிக அளவில் மறைமுக வினாக்கள் இடம் பெற்றதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது,
‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் 9, 10, 12, 15, 20 ஆகியவினாக்கள் பாடப் பகுதியின் ள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தன. அதற்கு பதில் அளிப்பது மாணவர்களுக்கு கடினமாக இருந்தது. அதேபோல, 2 மதிப்பெண் பகுதியில் 28 மற்றும் 30-வது கேள்விகள் (இலக்கண பகுதி) மறைமுக வினாக்களாக இருந்தன. சுமார் 8 முதல்10 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் 3 மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதாகவே இருந்தன’’ என்றனர்.
பிளஸ் 1 வகுப்புக்கான இயற்பியல், கணினி தொழில்நுட்பம், பொருளியல் பாடங்களுக்கான தேர்வுகள் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளன.பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. ஏற்கெனவே நடைபெற்ற பிளஸ் 2 ஆங்கில பாடத் தேர்வும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.