பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை நிறைவு: விடைத்தாள் திருத்தம் ஏப்.6-ல் தொடங்கும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 24, 2024

Comments:0

பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை நிறைவு: விடைத்தாள் திருத்தம் ஏப்.6-ல் தொடங்கும்



பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளை நிறைவு: விடைத்தாள் திருத்தம் ஏப்.6-ல் தொடங்கும்

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடப்பாண்டு பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத் தேர்வு நாளையுடன் (மார்ச் 25) நிறைவு பெறுகிறது.

இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.6-ம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத் தேர்வு முடிந்ததும் மார்ச் 30-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப்.4-ம் தேதி முதல் அனுப்பிவைக்கப்படும். தொடர்ந்து ஏப்.6முதல் 25-ம் தேதி வரை திருத்துதல்பணிகள் நடைபெற உள்ளன. முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்.6 முதல் 13-ம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்படும்.

அதன்பின் ரெகுலர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்துதல் ஏப்.15 முதல் 25-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வுமுடிவுகள் மே 14-ல் வெளியிடப் படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews