பிளஸ் 1 மாணவர்கள் ரூ.10,000 உதவித்தொகை பெற தயாரா? - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 07, 2023

Comments:0

பிளஸ் 1 மாணவர்கள் ரூ.10,000 உதவித்தொகை பெற தயாரா? - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2023

பிளஸ் 1 மாணவர்கள் உதவித்தொகை பெற தயாரா?

2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 வகுப்பில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை விவரம்

அரசுப் பள்ளி மாணவர்களின் திறனைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கல்வியாண்டு முதல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வின் மூலம் 1,000 பேர் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டைப் பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 (மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டுக்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் 9 , 10ஆம் வகுப்புகளின் கணிதம் அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு இருதாள்களாகத் தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 50 கேள்விகள் கேட்கப்படும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60, இரண்டாம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 கேட்கப்படும்.

முக்கியத் தேதிகள்

வருகிற 23.09.2023 (சனிக்கிழமை) அன்று திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்; இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ.50ஐ சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.08.2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews