அரசு பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 26, 2022

Comments:0

அரசு பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு

சென்னையில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் முதல் முறையாக 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட்போட்டி தொடர்பாக போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக வட்டார மற்றும் மாவட்ட அளவில் செஸ்போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களை அரசின் செலவில் விமானத்தில் சென்று செஸ் போட்டியினை பார்வையிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. kaninikkalvi.blogspot.com மாவட்ட அளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்ற 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா முதலிடமும்,சுபலட்சுமி இராண்டாமிடமும்,17 வயதிற்குட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷர்மிளா மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் 3 பேரும் தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை காண அழைத்துச் செல்லப்படுகின்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை ஜெயலதா பாராட்டி பரிசுகள் வழங்கினார்.பள்ளி உடற்கல்வி இயக்குனர் காளிராஜ்,உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி. லட்சுமி,அந்தோணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews