Breaking

Monday, August 01, 2022

இந்த வயசுல இப்படி ஒரு திறமையா.. 3 மொழிகளில்16 புத்தகங்களை எழுதிய +1 மாணவி..

Coimbatore Latest News : கோவை புத்தக திருவிழாவில் 16 வயதில் 16 நூல்கள் எழுதியுள்ள இளம் எழுத்தாளரின் புத்தகங்கள் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில் 6வது புத்தக கண்காட்சி கோவை அவினாசி சாலை பகுதியிலுள்ள கொடிசியா வணிக வளாகத்தில் கடந்த 22ம் தேதி துவங்கி நடைபெற்றது. கடந்த 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தக கண்காட்சியில் 250 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளதோடு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தினர்.

சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்..

இதில் சக்தி ஸ்ரீ தேவி என்ற 16 வயது இளம் எழுத்தாளர், தான் எழுதியுள்ள 16 புத்தகங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். ஈரோட்டை சேர்ந்த சுரேஷ்-பிரியா தம்பதியரின் மகள் சக்திஸ்ரீதேவி, டேராடூனில் 11ம் வகுப்பில் பயின்று வருகிறார்.

தனது 8 வயது முதல் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் கற்பனை கதைகள், சிறுகதைகள், கவிதை தொகுப்புகள் என பல்வேறு வகைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.

16 புத்தகங்களும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. இருந்த போதிலும் அவற்றின் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் உள்ளன. இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் புத்தகங்களை எழுதியுள்ளார்.

சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்.. புத்தகங்கள் எழுதுவது மட்டுமல்லாது பாடகராகவும், பேச்சாளராகவும் உள்ளார் சக்திஸ்ரீதேவி.

சக்தி ஸ்ரீ தேவி - 16 வயது எழுத்தாளர்..

ஒவ்வொரு கதைகளை படிக்கும்போதும் 30 நாளில் ஒருவரின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் இவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதி மக்களின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பேன் என்கிறார்நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog