உறவு கொள்ளக் கூடிய துணையுடன், ஒரே வீட்டில் நீங்கள் வாழ்ந்து வந்தால், அது எந்த வகையிலும் உங்கள் அந்தரங்க வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் இருவரில் ஒருவருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தால், நீங்கள் இருவரும் விலகி இருப்பது மிக அவசியம். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டில் புதிய துணையுடன் உறவு கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தாது எனக் கூற முடியாது. ஏனென்றால் அந்த புதிய துணைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அவருடன் நெருக்கமாக இருக்கும்போது நீங்களும் அந்த வைரஸால் பாதிக்கப்படலாம். எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், இந்த வைரஸ் மனிதர்களின் உடலிற்குள் வாழும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே சாதாரண முத்தம் கூட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவ காரணமாக இருக்ககூடும்.
அதிலும் நீங்கள் முத்தமிட்ட நபருக்கு, கொரோனா தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால், உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அறிகுறிகளின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு உங்கள் நிலையை சொல்லி விடுங்கள் . கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பது போல் காம உணர்ச்சியும் தவிர்க்க முடியாத உடல் தேவைதான். சமீபத்தில் வெளியான தகவலில் கூட மாஸ்க் விற்பனையைப் போல் ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறப்பட்டது. காரணம் கணவன் , மனைவி கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் இருப்பதே காரணம். அதேபோல் கொரோனா உடலுறவின் மூலம் பரவுமா என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பாதுகாப்பு அவசியம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.