கொரோனா பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 03, 2020

Comments:0

கொரோனா பற்றிய சில விசித்திரமான உண்மைகள்... கொரோனாவால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அனைவரும் விவாதிக்கும் மற்றும் அஞ்சும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். வரலாற்றில் இதற்கு முன்னாலும் பல பேரழிவுகளால் வைரஸ்களால் தோன்றியுள்ளன. ஆனால் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிய முதல் வைரஸ் கொரோனாதான்.சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் இப்போது சீனாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாலும் இப்போது மற்ற நாடுகளில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்நிலையில் அதனைச்சுற்றி பல புரளிகளும், அதனைக்குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகளும் பல உள்ளன. கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் வேறுசில பாதிப்புகளையும் மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. இந்த பதிவில் கொரோனா வைரஸ் குறித்த சில விசித்திரமான உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா பீர் பிராண்ட் ஆதாரங்கள் வெவ்வேறு முடிவுகளைக் கொடுத்துள்ளதால் இந்த தவறான நம்பிக்கையின் தாக்கம் தெளிவாக இல்லை. பிரிட்டிஷ் மார்க்கெட் ஆராய்ச்சியின் படி, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கொரோனா பீரின் விற்பனை மதிப்பெண் 75 லிருந்து 51 ஆகக் குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஆரம்பத்தில் மக்கள் இதன் பெயரை நினைத்து இதற்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்குமோ என்று அஞ்சியதுதான்.
சீன மருத்துவர் சீன மருத்துவர் லி-யின் மரணத்திற்கு துரதிர்ஷ்டமான மரணத்திற்கு பிறகு சீன மக்கள் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகினர். இவர் முன்கூட்டியே கொரோனா வைரஸ் பரவல் குறித்து மக்களையும், சக மருத்துவர்களையும் எச்சரித்தார். இதற்காக சீன அரசு இவரை எச்சரித்தது, இறுதியில் இவர் கொரோனா வைரஸ் தாக்கியதால்தான் இறந்தார். அவரின் மரணத்திற்கு பிறகு சீன சமூக ஊடகமான வெய்போவில் அவருக்காக ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டது. இருப்பினும், சீன அரசு அந்த ஹேஷ்டேக்குகளை விரைவாக தணிக்கை செய்தது. சீனா கொரோனவால் சீர்குலைந்த பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டது.
ஆண்களுக்கு ஆபத்து அதிகம் இதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் இது பெண்களில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் ஆண்களின் உடலில் இருக்கும் எக்ஸ் குரோமோசோம்களுடன் முரண்படுகிறது. இந்த பாலின வேறுபாடுகள் மனித குலத்தின் வளர்ச்சிக்கானது, பரிணாம விதிகளின் படி ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும்.
சார்ஸை விட அதிக மக்களை கொல்கிறது COVID-19 ன் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 3.4% ஆக உள்ளது. இதற்கு முன்னால் உலகில் ஏற்பட்ட பேரழிவு வைரஸ் என்றால் அது SARS. அதன் இறப்பு விகிதம் 9.6% ஆக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸின் முக்கியமான கவலை என்னவெனில் அது பரவும் விதம்தான். இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1.8 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் அவர்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.
பொருளாதார சீர்குலைவு உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸால் பெரும் பொருளாதார சீர்குலைவை சந்தித்து வருகிறது. எவ்வளவு விரைவில் இது கட்டுப்படுத்தப் படுகிறதோ அவ்வளவு விரைவாக உலக பொருளாதாரம் மீள்வதற்கு வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்கள் அனைத்து சேவைகளையும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, அதற்காக கொடுக்கப்படும் நிவாரணம் என இதனால் ஏற்பட்டிருக்கும் பேரழிவு என்பது கணிக்க முடியாத அளவிற்கு பெரியதாகும்.
பயோ ஆயுதம் இன்டர்நெட்டை உபயோகிப்பவர்களில் பலர் கொரோனா வைரஸை முதிர்ச்சியின்றிதான் கையாளுகின்றனர். சீனாவின் வுஹானில் இருந்து இது தோன்றியிருப்பது பலருக்கும் பல சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பல உலக தலைவர்களும் இதன் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அமெரிக்க செனட்டர் சீன அரசாங்கத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இனவாத அரசியல் பிரச்சினை ஆசியாவை சாராத பிற மக்கள் சீனாவுக்கு வந்ததால்தான் கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவியது. அங்கிருந்து அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியதன் மூலம் தங்கள் நாட்டிற்கும் இந்த தொற்றுநோயை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த புதிய தொற்றுநோய் இனவெறி மற்றும் அயல்நாட்டு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன எதிர்ப்பு உணர்வு கடந்த மூன்று மாதங்களாக உலக மக்களிடம் அதிக அளவு வளர்ந்து வருகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews