👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கென ஆய்வு அலுவலர்களும் பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மழைக்கால பாதிப்புகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்காக அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரமாக இருக்கும். அதனால் சுற்றுச்சுவர் உள்ள இடத்தில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதபடி தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். பள்ளி வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா, மின் கசிவுகள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளங்கள், ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கு வரும் வழியில் ஆறுகள் இருந்தால் அந்த வழியாக வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். பள்ளியை விட்டு செல்லும்போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மிதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.