பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 29, 2022

Comments:0

பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் அமைச்சா்கள் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா பரவலுக்குபின் அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. எனினும், ஆசிரியா் பணிநியமனம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு நிதி விடுவிப்பில் தொடா் தாமதம் நிலவிவருகிறது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ந.முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனா்.

இந்த கூட்டத்தில் பள்ளிகளில் பழுதடைந்த வகுப்பறைகளுக்கு பதில் 2,500 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவது, மாதிரிப் பள்ளிகளில் தற்காலிக பணியாளா்களை நிரந்தரமாக்குவது, மடிக்கணினி, மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியா் பணியிடங்களை உருவாக்குவது, தகைசால் பள்ளிகளுக்கு தேவைப்படும் ரூ.171 கோடி, தமிழ்வழியில் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் மாணவா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews