தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வரும் நிலையில், இந்தியாவில் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு , தீவிரமாக ஆலோசித்து பிறகு முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
பிளஸ் 2 தேர்வு நடத்த 60% ஆதரவு...இன்று முதல்வர் இறுதி ஆலோசனை!
அத்துடன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா ?வேண்டாமா ?என கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களின் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கல்வியாளர்கள் மருத்துவர்கள் முதல் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல் மாணவ – மாணவிகளிடையே இருவேறு கருத்துகள் நிலவுகிறது என்றும் மாணவர்களுடன் பாதுகாப்பு உடல்நலம் முக்கியம் என்ற நோக்கில் இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.அதேசமயம் மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு உள்ளதாகவும் இது குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறி, வாட்ஸ் அப் எண் மற்றும் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்த 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இறுதி முடிவு காண ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக்கு பிறகு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.