பொதுத் தேர்வு கட்டாயம்: தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை அரசு கட்டாய மாக நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரி யர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ.பீட்டர்ராஜா வியாழக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கை: பொறியியல் சேர்க்கை மாநில அரசின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. அதேபோன்று நுழைவுத் தேர்வின் அடிப் படையிலோ அல்லது மதிப்பெண் அடிப்படையிலோ மருத்துவக் கல்வி பயில குறைந்தபட்ச மதிப்பெண் அவசியமாகிறது. அரசு தேர்வு நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பாதுகாப்பை வழங்க முடியும். தனியார், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப் பகுதிகள் குறித்து நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாண வர்களின் நலன் கருதி, கரோனா தொற்று குறைந்த பின்னர் தமிழகத்தில் பொதுத் தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும். அதற்காக அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை உருவாக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.