கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண் .126/ஆ2/2020, நாள் 18.09.2020)
பொருள் - மேல்நிலை முதலாமாண்டு , இரண்டாமாண்டு சிறப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 2020) துணைத்தேர்வு மையங்களுக்கு -அறைக் கண்காணிப்பாளர்கள் - நியமனம் செய்து ஆணை வழங்குதல் - சார்பு.
பார்வை -
1.அரசுத் தேர்வுகள் இயக்குநர் சென்னை-06 செயல்முறைகள் ந.க.எண்.020527/ எச் 4/2020, நாள்.10.09.2018. * செப்டம்பர் - 2020 மேல்நிலை முதலாமாண்டு , இரண்டாமாண்டு சிறப்பு துணைத்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு இணைப்பு பட்டியலில் காணும் ஆசிரியர்களை அறைக் கண்காணிப்பார்களாக நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.
* தேர்வு மையங்களில் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் செவ்வனே செயல்பட தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி பணியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலை 8.00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை புரிந்திட வேண்டும். 8.30 மணிக்கு வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடல் வேண்டும். 9.00 மணிக்கு அனைத்து அறைக் கண்காணிப்பாளர்களும் வருகை புரிந்துள்ளார்கள் என்பதற்கான அறிக்கையினை 9.15 மணிக்குள் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* இந்நியமன ஆணையை இரத்து செய்யக் கோரும் விண்ணப்பங்கள் மாவட்டக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
* தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள் மீது புகார் பெறப்படின் ஆசிரியர் மீது அரசுத் தேர்வுத் துறையின் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். எனவே அறைக் கண்காணிப்பாளர்கள் மிகக் கவனத்துடன் தங்கள் பணியினை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. * எவ்வித சிறு புகார்களுக்கும் இடமின்றி நடைபெற அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும். பின்னர் எந்த ஒரு ஆசிரியராவது தேர்வுப் பணிக்கு வரவில்லை என முதன்மைக் கண்காணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டால், அவ்வாசிரியருக்கு ஒரு நாள் ஊதியம் நிறுத்தம் செய்வதுடன் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.
* அறைக் கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு 18.09.2020 அன்று தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நடத்தும் தேர்வு முன்னேற்பாடு கூட்டத்தில் தவறாது கலந்து தங்களின் வருகையினை பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* மேலும் கண் பார்வையற்ற தேர்வர்கள் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதும் தேர்வு அறைக்கு ஆசிரியரை அறைக் கண்காணிப்பாளராக | சொல்வதை எழுதுபவராக (அறைக் கண்காணிப்பாளராக நியமனமிக் கப்பட்டவர்களையே நியமனம் செய்தும் தனி கவனம் செலுத்திடுமாறும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் பள்ளிகளிலிருந்து அறைக் கண்காணிபப்ாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்பதால் தேர்வு மையங்களுக்கு நியமிக்கப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் தவறாமல் வருகை புரிய வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்
கள்ளக்குறிச்சி
பெறுநர்
சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியர் மூலமாக)
நகல் - முதன்மைக் கல்வி அலுவலர் விழுப்புரம் அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.
நகல் - சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
நகல் -- சம்மந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் (அறைக் கண்காணிப்பாளர்
கூட்டத்தில் உரிய அறிவுரை வழங்கி பணி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.